வீதியில் இசைத்தாலும்

தலைப்பு: வீதியில் இசைத்தாலும்

இயக்கம்:  இன்பா

வதியும் நாடு: அமெரிக்கா

இப்படம் பதிவு செய்துள்ள காட்சிகள், நாம் அன்றாடம் தெருவில் காணும் காட்சிகள்தான். ஆனால் அவற்றுக்குள்ளும் ஒரு அர்த்தம் இருக்கிறது, வாழ்வு இருக்கிறது என்பதைச் சுட்ட விரும்புகிறார் இயக்குநர்.  ஆனால் காட்சிகளின் தொகுப்பாக்கத்தில் உள்ள குறை பாட்டினால், அது செழுமைப்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்பா!

நீங்கள் சொல்ல வந்த கருப்பொருள், உங்களிடம் நிறைந்திருக்கும் நேய உணர்வினையும், சூழலின் அவதானிப்பையும் தெளிவாகக் காட்டுகிறது. ஒரு படைப்பாளியிடம் முதலில் இருக்க வேண்டிய தகமையது எனச் சொல்லலாம். அந்த வகையில் நீங்கள் இன்னமும் நிறையவே, நிறைவாகவே பல படைப்புக்களைத் தரமுடியும். போட்டியில் கலந்து கொண்ட உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

~ by ganam on July 25, 2007.

One Response to “வீதியில் இசைத்தாலும்”

  1. நல்லா இருந்தது. கடைசியில் வரூம் அந்த இளையராசாவின் குரல் மேலே எழுந்து.. கேட்டிருக்கலாமோ என்று தோறுகிறது.

Leave a Reply