பகை

தலைப்பு:  பகை

இயக்கம்: யெஸ். பாலபாரதி

வதியும்நாடு:  இந்தியா

போட்டிக்கு நாம் அறிவித்திருந்த நேரம் ஓரு நிமிடம் ( 60 செக்கன்கள்). ஆனால் 44 செக்கன்களுக்குள் ஒரு சமூகப்பிரச்சனையை சிறப்பாகப் படமாக்கியிருந்தமைக்காக எங்கள் குழுவினரின் பாராட்டுக்கள்.  இது தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட படம்.  அதன்காரணமாகவே, பதிவாக்கலில் சிறு தளம்பல்கள் தெரிகிறது. மற்றும்படி அனைத்தும் பாராட்டத் தக்கவண்ணமேயுள்ளன.

பாலா!

இவ்வளவு சிறப்பாக உங்கள் எண்ணங்களைச் சொல்ல முயன்றிருக்கும் உங்கள் முயற்சி திருவினையாக்கட்டும்.  இந்த முதல் முயற்சி உங்களுக்கு நல்ல ஒரு ஆரம்பமாக அமையட்டும்.  இனிவருங்காலங்களில் மேலும் பல சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம். போட்டியில் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

~ by ganam on July 25, 2007.

13 Responses to “பகை”

  1. நல்லதொரு முயற்சி…!!!! அருமை…!!!! நல்ல தீம்…காப்பிரைட் செய்யுங்கப்பா…

  2. தல,

    புது அவதாரமா? நடத்துங்க. முதல் முயற்சி என்கிற அளவில அளவில்லா பாராட்டுக்கள். செல்போன் கேமராவை அவசரத் தேவைக்கு மட்டும் வச்சுக்கிட்டு, அசல் கேமிராக்களை எடுத்து, புதிய பதிவுகளைத் தாங்க.

  3. அனைத்து படைப்புகளும் மகிழ்ச்சியளிக்கின்றன. அந்த ஒரு நிமிட நேரத்தில்
    அனைவருமே செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். இதுவே இந்தப் போட்டி என்ற முயற்சியின் வெற்றியைக் காட்டுவதாக அமைகிறது. அதேபோல தேர்வுக்குழுவினரும் நேர்த்தியான கலைஞர்களாகத் தெரிகிறார்கள்.

    இக்கலை வளர வாழ்த்துகள்.

    கேசகி, பாலபாரதி, சாரா, இன்பா அனைவருக்கும் பாராட்டுகள்.

    பாலபாரதி நிச்சயம் புகைஞர்களின் பகையைத் தேடிக் கொண்டிருக்கின்றார் :-) படத்திலே புகைப்பவரின் பார்வையும் பின்னர் கண்ணாடியின் முன் நின்று (?) மாலைபோட்டுக் கொண்டு புகை வீசுவது – எளிமையான சிறந்த கற்பனை வளம். பாராட்டுகள். இதையே சங்கர் இயக்கியிருந்தால் எப்படிச் செய்திருப்பார் எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. எனினும், படக்கவரியின் (காமிரா) முன் நெருக்கத்தில் அவர் புகையை ஊதுவது அவரின் இயல்பின் இருந்து சற்று மாறுபட்டிருக்கிறது.

    கேசகி சொல்லும் செய்தி மிக உயரியது. இந்தச் செய்தி பொதுமக்களைச் சென்று சேர்வதோடு அரசாங்கங்களைச் சென்று சேர வேண்டும். வரலாற்றின் எல்லா காலங்களிலும் ஆன்மீகத்தின் அங்கங்களிலும் நிறைந்திருக்கும் இந்தச் செய்தியை அனனவரும் இரசிப்பதோடு மட்டுமன்றி, உலக மயமாக்கல், நாகரிக மயமாக்கல் போன்ற தத்துவங்களில் மயங்கி, “survival of the fittest” என்ற கானத்தில் திளைப்பவர்கள் ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. ஒலி அளவு இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்க வேண்டும். தமிழில் கிரந்த எழுத்துகள் குறையும் போது தலைப்பு மற்றும் செய்தியின் வலு பன்மடங்காகக் கூடும்.

    இன்பா காட்டிய அந்த தெருவாட்டம் அயரவைக்கிறது, நாமே எல்லாவற்ற்றிலும் சிறந்தவர்கள் என்று எண்ணும் கலைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. தமிழகத் திரை நாயகர்களுக்கு அப்பிழிகம் (அபிசேகம்) செய்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

    சாரா சொல்லும் செய்தி உன்னதமானது. இதைப் பார்க்கும் போது ஆரியமே உயர்வு என்ற எண்ணத்தில் ஆரிய உயர்வுக்காக ஆரியத்திலேயே பிறந்த ஆனால் உடல் ஊனமுற்றோராக, மன உளைவு கொண்டோராக, சற்றே அழுக்காகத் திரிந்தவரையெல்லாம் கொன்று மனிதத்தை அழித்த
    நாசியம் மற்றும் வருணமாக பிரித்து வைத்த மனிதத்தை அழித்த வைதீகம்
    என்ற இரண்டும் கண் முன் வந்தது. ஆயினும், இயல்பான மனிதம்
    என்றுமே உயர்ந்தே இருக்கிறது.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

  4. தலன்னா தலதான். ரொம்ப நல்லா இருக்கு உத்தி … வளர வாழ்த்துக்கள்

  5. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே..,

    இளங்கோவன்,போட்டோ பிடித்து அதை ப்ரேம் போட்டு எடுக்க வசதி இல்லை. அதனால் அப்படி எடுத்து விட்டோம். :(

  6. அய்யோ… இதில் நடித்த ரூபன் என்பவருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன். :)

  7. //போட்டோ பிடித்து அதை ப்ரேம் போட்டு எடுக்க வசதி இல்லை
    அதனால் அப்படி எடுத்து விட்டோம்.//

    அதனால்தான் அது சிறப்பாகத் தெரிகிறது.

  8. நல்ல கரு. எடுத்த விதம் அருமை. கேமரா யாரு? நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  9. நல்லதொரு குறும்படம். புகைஞர்கள் திருந்துவார்களா?

  10. பரிசு பெற்ற படங்களில் இந்தப் படம் அருமை. எளிமையான ஆனால் வலுவான கருப்பொருள். பாலபாரதிக்குப் பாராட்டுக்கள்

  11. superb!

  12. ம்! நல்ல முயற்சி அண்ணா! நீங்கள் கையாண்ட உத்தி மிக நல்லா இருந்தது! இது குறும்படம் அல்ல! “புகைப்படம்”! வாழ்த்துக்கள் அண்ணா!

  13. Welldone. Crisp and trendy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.